தமிழ்நாடு (Tamil Nadu)

கொடநாடு கொலை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகனிடம் 3-வது நாளாக விசாரணை

Published On 2022-07-09 08:36 GMT   |   Update On 2022-07-09 08:36 GMT
  • செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • செந்தில்குமாரிடம் கொடநாடு தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபரும், மணல் ஒப்பந்ததாரருமான ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

நேற்றுமுன்தினம் அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாகவும் செந்தில்குமாரிடம் விசாரித்தனர். மேலும் அவரது தந்தையான ஆறுமுகசாமியிடமும் விசாரணை நடைபெற்றது. அவர் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் கொடநாடு தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு ஆவணங்கள் எப்படி வந்தது. இந்த வழக்கில் என்னென்ன தகவல்கள் தெரியும் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை தனிப்படையினரிடம் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

Similar News