தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: மதுக்கடைகளை மூடவேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2023-09-05 06:37 GMT   |   Update On 2023-09-05 06:37 GMT
  • தமிழக அரசு வீண் விவாதங்களிலும், விளம்பரம் தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது.
  • உழைக்கும் மக்களின் வருமானம் முழவதும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் 3 பேர் மது அருந்திகொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சிறிது காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து வருவது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரிக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. பெண்கள் பகலில் கூட தனியாக நடமாட முடியாத நிலை. வழிப்பறி, பாலியல் தொந்திரவு என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எல்லாவற்றிக்கும் மூல காரணம் மதுவாகத்தான் இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதன் மூலம் வருமானத்தை மட்டுமே பார்கிறார்களே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை பார்க்கவில்லை. தமிழக அரசு வீண் விவாதங்களிலும், விளம்பரம் தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது. தமிழகமும், மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் அரசு மதுக்கடைகளை மூடவேண்டும். உழைக்கும் மக்களின் வருமானம் முழவதும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழகம் தலைநிமிரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News