தமிழ்நாடு

கள்ளச்சாராய உயிரிழப்புகள் - நாம் வெட்கப்பட வேண்டும்: பா.ஜ.க. மாநில செயலாளர் ஆவேசம்

Published On 2024-06-26 15:45 GMT   |   Update On 2024-06-26 15:45 GMT
  • சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் வலுக்கின்றன.
  • சமூகமாக நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரபலங்கள் தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வளவு நாட்களுக்குத் தான் தமிழ்நாடு இதுபோன்ற மோசமான விஷயங்களை தாங்கிக்கொள்ளப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழகத்தில் தற்போது 14,63,000 விதவைகள் உள்ளனர். இவர்களின் கணவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தவர்கள். டாஸ்மாக் என்ற கொலை இயந்திரம் அடுத்தடுத்த ஆட்சிகளில் வளர்ந்து வருகிறது. ஒரு சமூகமாக நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும். விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே," என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News