4 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் போட்டி: வேட்பாளர்களை அறிவித்த திருமாவளவன்
- கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
- மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை தவிர மேலும் 4 மாநி லங்களிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திராவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.