தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் கிறிஸ்தவ ஆலய கோபுரம் தெரிந்தது

Published On 2023-07-14 03:11 GMT   |   Update On 2023-07-14 03:11 GMT
  • கிராமங்களில் இருந்த இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
  • நீர்மட்டம் குறையும்போது பண்ணவாடி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேசுவரர் ஆலய நந்தி சிலை ஆகியன வெளியே தெரியும்.

மேட்டூர்:

மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு பண்ணவாடி, காவேரிபுரம், கோட்டையூர் போன்ற கிராமங்கள் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளன. அணை கட்டப்பட்டபோது அந்த கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால், கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியேறி வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

ஆனால் அந்த கிராமங்களில் இருந்த இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது பண்ணவாடி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேசுவரர் ஆலய நந்தி சிலை ஆகியன வெளியே தெரியும்.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்துள்ளதால் சுமார் ஒரு அடி அளவிற்கு கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 68 அடிக்கு கீழ் குறையும் போது, ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரியும்.

கடந்த 2 ஆண்டுகளாகவே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 80 அடிக்கு மேல் இருந்ததால் இந்த ஆலயங்களை தண்ணீர் மட்டத்துக்கு மேல் காண முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News