தமிழ்நாடு

அமைச்சர் செந்தில்பாலாஜி 'டிஸ்சார்ஜ்'- புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்

Published On 2023-12-07 05:01 GMT   |   Update On 2023-12-07 05:01 GMT
  • செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னை:

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவ குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News