பொங்கல் திருநாள் முதல் "முதல்வர் மருந்தகம் திட்டம்" தொடக்கம்- மு.க.ஸ்டாலின்
- 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
- தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை:
இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.
* ஆக.15 ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.
* சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.
* வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
* 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* வருகிற பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.
* ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.
* நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்று கூறினார்.