2024 புத்தாண்டு கொண்டாட்டம்- சென்னை மெரினாவில் குவியும் மக்கள்
- மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி.
- சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.
மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைகளுக்கு திரண்டுள்ளனர்.
சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைக்குள் நுழையும் அனைவரையும் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர்
கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்- சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரை சாலையில் சுற்றுலா துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலையும் மூடப்பட்டது.