தமிழ்நாடு (Tamil Nadu)

நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

Published On 2023-03-10 08:10 GMT   |   Update On 2023-03-10 08:10 GMT
  • நிர்வாகத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர என்.எல்.சி. நிர்வாகத்துக்கு அழுத்தம் தர வேண்டும்

சென்னை:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் தனது 2-வது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினார்கள்.

மாக்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

என்.எல்.சி. நிர்வாகத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

நிர்வாகத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக புதிய இடங்கள் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர என்.எல்.சி. நிர்வாகத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News