தமிழ்நாடு
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
வானிலை மாற்றம் காரணமாக கடலோர பகுதியில் அதிக காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது. பலமான காற்று வீசக்கூடும் என்பதனை வலியுறுத்தும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 260 விசைப்படகுகள் இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.