தமிழ்நாடு

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2024-08-26 09:30 GMT   |   Update On 2024-08-26 09:30 GMT
  • வாக்குறுதி அளித்த தி.மு.க. மவுனம் சாதிக்கிறது.
  • பணிக்கொடை மற்றும் இதர பணப் பலன்களை வழங்கவும், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி எண் 309-ல், "புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில் எவ்வித வாக்குறுதியும் அளிக்காத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்ற எண்ணத்தில் ஒரு முயற்சி எடுத்து மேற்படி திட்டத்தினை மத்திய அரசு 1.4.2025 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. ஆனால், வாக்குறுதி அளித்த தி.மு.க. மவுனம் சாதிக்கிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் துளிகூட இல்லாத தி.மு.க. அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்றும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற மறுநாளிலிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர பணப் பலன்களை வழங்கவும், முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News