தமிழ்நாடு

சென்னையில் கார் பந்தயம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-08-12 04:20 GMT   |   Update On 2024-08-12 05:21 GMT
  • கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
  • கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

"தமிழ்நாட்டினுடைய கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம் தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்."

"சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News