தமிழ்நாடு (Tamil Nadu)

குமுளியில் மோப்பநாய் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

ஓணம் பண்டிகையையொட்டி மது கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர சோதனை

Published On 2022-08-25 05:10 GMT   |   Update On 2022-08-25 05:10 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் போலீசார் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இடுக்கி நாய் படையை சேர்ந்த புரூஸ் மற்றும் லைக்கா ஆகிய நாய்கள் உதவியுடன் மது மற்றும் போதைபொருள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கூடலூர்:

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஓணம் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பண்டிகையின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மது மற்றும் போதை பொருள் கடத்தி வந்தனர்.

போலீசார் சோதனையில் அவை பிடிபட்டது. அதனைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் போலீசார் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குமுளி சோதனைச்சாவடியில் இடுக்கி கலால்டிவிசன் போலீசார் மோப்பநாய் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இடுக்கி நாய் படையை சேர்ந்த புரூஸ் மற்றும் லைக்கா ஆகிய நாய்கள் உதவியுடன் மது மற்றும் போதைபொருள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

புலனாய்வுத்துறை இணை கலால் ஆணையர் ரஞ்சித், இடுக்கி கலால் துணை ஆணையர் சலீம் ஆகியோர் உத்தரவுப்படி வண்டிபெரியாறு கலால் ஆய்வாளர் ராஜேஸ், குமுளி சோதனைச்சாவடி கலால் ஆய்வாளர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தபின்னர் தமிழக பகுதியிலிருந்து கேரளாவுக்குள் அனுமதிக்கின்றனர்.

Tags:    

Similar News