தமிழ்நாடு

ஜெய்ப்பூரில் இருந்து ஓட்டல்களுக்கு ரெயிலில் வந்த 1½ டன் ஆட்டு இறைச்சி பறிமுதல்

Published On 2024-08-20 08:31 GMT   |   Update On 2024-08-20 08:31 GMT
  • பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
  • 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

அதில் பார்சல் பெட்டியில் ஆட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வந்த குழுவினர் அந்த ரெயிலில் இருந்த இறைச்சியினை பரிசோதனை செய்தனர்.

அப்போது முறையாக பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

3 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை சென்னைக்கு கொண்டு வந்து ஓட்டல்களில் சப்ளை செய்ய இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கெட்டுப்போன அந்த இறைச்சியை பரிசோதனை செய்த பிறகு தான் அதன் தன்மை தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News