நாளை மிலாது நபி- தலைவர்கள் வாழ்த்து
- முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள்.
- மிலாது நபிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள். நாளை மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்நாளாம் ''மீலாது நபி'' திருநாளில், உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், ''உண்மையைப் பேசுதல்; தூய எண்ணத்தோடு வாழ்தல்; ஏழை, எளியோருக்கு உதவிபுரிதல்; அனைவரிடத்திலும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல்; புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல்'' என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.
நபிகள் நாயகம் பிறந்தநாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த ''மீலாது நபி'' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.