தமிழ்நாடு

தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ராமதாஸ் - சேகர்பாபு பதிலடி

Published On 2024-07-27 12:04 GMT   |   Update On 2024-07-27 12:04 GMT
  • 100 வயதை கடந்த கலைஞரை கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள்
  • மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியது தி.மு.க.-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும்.

தி.மு.க. எப்போதுமே சந்திக்காத ஏச்சுக்களும், பேச்சுக்களும் இல்லை. 100 வயதை கடந்த கலைஞரை கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள். இப்படி விமர்சிப்பவர்களை சீர்தூக்கி பார்த்தால், தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகவும், வெற்றி வாய்ப்பை இழப்பவர்களாகவும் இருப்பார்கள்.

முதல்வர் நெஞ்சிறத்துடனும், நேர்மையுடனும் இந்த ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பதால், வஞ்சனை எண்ணத்தோடு ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் பற்றி முதல்வர் கவலைப்படுவது இல்லை. மக்களுடைய நலத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவர்களுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

Tags:    

Similar News