பேரிடரில் மீண்டோம்... சேலத்தில் சந்திப்போம்- தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
- எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறை பொறுப்பு கொண்ட ஆட்சி.
- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைபுபடுத்தினேன்.
சென்னை:
மிச்சாங் புயல் காரணமாக மிக கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் அயறாது பணியாற்றிய தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறை, பொறுப்பு கொண்ட ஆட்சி திமுக. விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்கட்சிகள் முனைப்பு காட்டினாலும் மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. புயல் பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிட அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுப்படுத்தினேன். இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.
பேரிடர்களில் இருந்து மீண்டோம். சேலம் இளைஞரணி மாநாட்டில் சந்திப்போம்.
இவ்வாறு கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.