கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைப்பு
- கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
- கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.