தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்- தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

Published On 2023-12-18 16:39 GMT   |   Update On 2023-12-18 16:39 GMT
  • நாளை காளை 5 ஹெலிகாப்டர், ஒரு விமானம் மூலம் மீட்பு பணி நடைபெற உள்ளது.
  • கிராம புறங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தருவது தான் முதல் பணியாக உள்ளது.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:-

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 5 ஹெரிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மீட்பு படை 10 குழுக்கள், 168 ராணுவ வீரர்கள், விமானப்படை மூலம் 1000 கிலோ உணவு விநியோகம் செய்துள்ளோம். நாளை காளை 5 ஹெலிகாப்டர், ஒரு விமானம் மூலம் மீட்பு பணி நடைபெற உள்ளது.

வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்த முடியவில்லை. மேலும், 106 நிவாரண முகாம்கள் திறப்பு, 905 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் 200 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 மாவட்டங்களிலும் மீட்பு பணியில் 140 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து 100 பம்புகள் அனுப்பப்பட்டுள்ளது. கிராம புறங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தருவது தான் முதல் பணியாக உள்ளது.

நெல்லையில் நீர் வடிய தொடங்கி உள்ளது. மற்ற பகுதிகளில் விரைவில் வடியும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News