தமிழ்நாடு

கோத்தகிரி பகுதியில் சுற்றி திரியும் கரடி குடியிருப்பு வாசிகள் அச்சம்-பரபரப்பு

Published On 2023-09-18 06:20 GMT   |   Update On 2023-09-18 06:20 GMT
  • பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.
  • கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரவேணு:

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அவை உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.

இந்நிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா கிராமத்தில் ஒரு கரடி நேற்று புகுந்தது. அங்கு அங்கு உள்ள பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனா். சேசலாடா குடியிருப்புப் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்த கரடி, பின்னா் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு சென்று விட்டது.

எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனா். 

Tags:    

Similar News