தமிழ்நாடு

ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2024-07-05 09:21 GMT   |   Update On 2024-07-05 10:02 GMT
  • ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.
  • அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

ரேஷனில் 3 மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் ரேஷன் பொருள் தட்டுப்பாடு குறித்து சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத திமுக அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ரேஷன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு, மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News