தமிழ்நாடு

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் பலத்த பாதுகாப்பு: 3கி.மீ. தூரத்துக்கு தடுப்புகள் அமைப்பு

Published On 2024-01-14 11:14 GMT   |   Update On 2024-01-14 11:14 GMT
  • பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.

சென்னை:

சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்துக்கு கடற்கரையில் தடுப்பு கட்டை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கடலில் இறங்கி குளிக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.

கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காகக் குழந்தை களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று அடையாள அட்டைகளை கைகளில் கட்டி விட திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News