மாணவர் பேரணி தொடக்கம்: தமிழகத்தில் பாஜகவை கால் பதிக்க விடக்கூடாது- உதயநிதி ஸ்டாலின்
- அனைவரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேரணியாக செல்ல திரளாக திரண்டு உள்ளீர்கள்.
- 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும்.
ராயபுரம்:
சென்னை ராயபுரத்தில் 16 மாணவர் இயக்கங்கள் ஒன்றிணைந்த இந்திய மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பின் சார்பில் பிரமாண்ட மாணவர் பேரணி இன்று காலை நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். ராயபுரம் மேற்கு மாதா கோவில் சந்திப்பில் தொடங்கிய இந்த பேரணியை தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கையில் தேசிய கொடி ஏந்தி தொடங்கி வைத்தார்.
தி.மு.க. மாணவர் அணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அமைப்பினர் அனைவரும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேரணியாக செல்ல திரளாக திரண்டு உள்ளீர்கள்.
இந்த பேரணியை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பேரணியை தொடங்கி வைத்து உங்களோடு பேரணி முடியு ம் வரை நடந்து வர திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி தினமும் ஒவ்வொரு தொகுதியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடந்து வருவதால் அதில் பங்கேற்க செல்ல வேண்டி உள்ளது. எனவே உங்களை வாழ்த்தி இந்த பேரணியை தொடங்கி வைக்கிறேன்.
சேலத்தில் நடைபெற்ற தி.மு.க இளைஞரணி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது.
அதனை தூக்கி சாப்பிடும் வகையில் இந்த பேரணியிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உள்ளீர்கள்.
அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மாநில அரசுகளின் கல்வி உரிமைகளை பறித்து வைத்துள்ளது.
அதனை மீட்கும் வகையிலும், தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கும் வகையிலும், 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு, நீட்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எதிர்க்கும் வகையில் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவை காப்போம் என்ற கோஷமும் இந்த பேரணியில் முன் வைக்கப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதாவை வீழ்த்தி இந்தியாவை காக்க வேண்டும் என்றால் வருகிற தேர்தலில் இந்தியா கூட்ட ணி வெற்றி பெற வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற நீங்கள் உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை கால் பதிக்க விடக்கூடாது. அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி. சேகர், கே.பி. சங்கர், எபிநேசர், தாயகம் கவி, மாவட்ட செயலாளர் இளைய அருணா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், புழல் நாராயணன் உள் ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பேரணியில் தி.மு.க. மாணவர் அணி, இந்திய மாணவர் பெருமன்றம், சமூக நீதி மாணவர் இயக்கம், திராவிடர் மாணவர் கழகம், உள்ளிட்ட 16 மாணவர் இயக்கங்களை சேர்ந்த மாணவர் அமைப்பினர் கல்லூரி மாணவ-மாணவி கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க கொடியுடன் தேசிய கொடியையும் ஏந்தி சென்றனர். நீட்தேர்வு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பேனர்களை கையில் ஏந்தியபடி சென்றனர். காப்போம், காப்போம், இந்தியாவை காப்போம், பாரதியஜனதா அரசை நீக்குவோம் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி ராபின்சன் மைதானத்தில் நிறைவு பெற்றது.