தமிழகத்தில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
- தமிழக அமைச்சரவையில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.
தமிழக அமைச்சரவையில் நேற்றிரவு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது.
இவர் உள்பட நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இதோடு ஆறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 29) மதியம் 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், இரா. இராஜேந்திரனுக்கு முதலில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றுக் கொண்டார். கோவி செழியன் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சா.மு. நாசர் மீண்டும் தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.