தமிழ்நாடு

பன்றி பண்ணை இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல 1 ஆண்டு தடை

Published On 2023-03-31 05:00 GMT   |   Update On 2023-03-31 07:30 GMT
  • ஆப்பிரிக்க வைரஸ் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
  • பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவற்றை குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் சில வருடங்களாக வெண் பன்றி பண்ணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென இறந்தது. அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் அவற்றின் ரத்த மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்க வைரஸ் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவற்றை குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பண்ணை இருந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிகாரிகள் உத்தரவுப்படி நேற்று கால்நடை துறையினர் 12 பேர், கவச உடை அணிந்து பன்றி பண்ணைக்கு வந்திருந்தனர்.

அவர்கள் அந்த பண்ணையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழமான குழி தோண்டி, பன்றிகளை அழித்து குழிக்குள் போட்டு மூடினர். மேலும் பண்ணை அமைந்துள்ள பகுதி 1 வருடத்திற்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அறிவிப்பு பேனரை அதிகாரிகள் வைத்து விட்டு சென்றனர்.

Tags:    

Similar News