4, 5-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள் 'வாட்ஸ் அப்'பில் வெளியானது
- வினாத்தாள்களை அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
- தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் வினாத்தாள்களுமே வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி 27-ந்தேதிவரை நடக்கின்றன.
இந்த தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள்களை அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 4, 5ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் வினாத்தாள்களுமே வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் பள்ளி ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.