தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதிவு செய்யும் வாக்குகள் 84 இடங்களில் எண்ணப்படுகிறது

Published On 2023-03-18 06:11 GMT   |   Update On 2023-03-18 06:11 GMT
  • அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் 75 மாவட்டங்களாக செயல்பட்டு வருகின்றன.
  • புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரை, கேரளா, புதுடெல்லி, அந்தமான் ஆகிய இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மாவட்டம் வாரியாக எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 9 இடங்கள் உள்பட மொத்தம் 84 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

அதற்கான இடங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை வடக்கு (கிழக்கு) அலுவலகம், அயனாவரத்தில் உள்ள வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அலுவலகம், வடசென்னைக்கு தெற்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு உட்பட்ட ராயபுரத்தில் ஸ்ரீவெக்கா மஹால், புதுபேட்டையில் உள்ள வடசென்னை தெற்கு (மேற்கு) அலுவலகம் ஆகியவை ஓட்டு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் அவைத் தலைவர் அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அலுவலகம், வேளச்சேரியில் உள்ள தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அலுவலகம், விருகம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை தெற்கு (மேற்கு) அலுவலகம், கந்தன்சாவடியில் உள்ள தென்சென்னை புறநகர் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றிலும் அ.தி.மு.க. உறுப்பினர்களால் பதிவு செய்யப்படும் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் வேறு சில இடங்களும் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்டு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மாநிலம் முழுவதும் 75 மாவட்டங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரை, கேரளா, புதுடெல்லி, அந்தமான் ஆகிய இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News