மகளிர் உரிமைத் தொகை... மீண்டும் விண்ணப்பிக்கலாம்
- மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை :
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி அடிப்படையில் குடும்பத் தலைவிகள் மாதம் தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
திருநங்கைகள், பெண்கள் 150 நபர்களுக்கு பொது சேவை வாகனம் (PSV) பேட்ஜ்களுடன் கூடிய இலகுரக மோட்டார் வாகனங்களில் சுயசார்ப்பு திறன் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. 100 திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு 3 சக்கர வாகன ஓட்டுர் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.