தமிழ்நாடு (Tamil Nadu)

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலை இல்லை... அண்ணாமலை

Published On 2024-07-13 07:46 GMT   |   Update On 2024-07-13 07:46 GMT
  • முதல் முறையாக கூட்டணி கட்சிகள் இணைந்து களபணியாற்றி இருக்கிறார்கள்.
  • அரசின் அதிகார பலம், பணபலத்தை தாண்டி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு கருத்து தெரிவிப்பேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியை சார்ந்தே எப்போதும் செல்கிறது. அதன் பிறகு ஒரு ஆண்டுக்கு பிறகு வரும் தேர்தலில் முழுமையாக முடிவுகள் மாறி இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

இந்த முறையும் அப்படித்தான் பார்க்கிறோம். இடைத்தேர்தல் முடிவுகள்தான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறானது. இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை. இப்போதும் அப்படி இருக்க போவதில்லை.

இருந்தாலும் மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த மாற்று கருத்து கூறினாலும் மக்களின் வாக்கு வாக்குதான். முதல் முறையாக கூட்டணி கட்சிகள் இணைந்து களபணியாற்றி இருக்கிறார்கள்.

அரசின் அதிகார பலம், பணபலத்தை தாண்டி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். வருகிற காலம் கண்டிப்பாக மாறும். 2026-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பலத்தை இழக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News