தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்- மத்திய அரசு

Published On 2024-04-01 03:13 GMT   |   Update On 2024-04-01 03:19 GMT
  • கட்டண உயர்வு அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
  • சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைப்பது வழக்கம்.

இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலில் ஏப்ரல்-1ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சவாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

இதில் பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.


கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News