கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
- மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புத்தாண்டையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார். அப்போது அவர்கள் புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரியகருப்பன், முத்துசாமி, சக்கரபாணி, ரகுபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மயிலைவேலு, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தி.நகர் ஜெ.கருணாநிதி மேயர் பிரியா.
தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பணீந்திர ரெட்டி, சுப்ரியாசாகு, ராஜேஷ் லக்கானி, அமுதா, சிவதாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, நீரஜ்மிட்டல், கிரிலோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.