தமிழ்நாடு

கபடி வீரர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Published On 2022-07-27 10:53 GMT   |   Update On 2022-07-27 10:53 GMT
  • கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.
  • விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெரு சேர்ந்த கபடி அணி வீரர் விமல்ராஜ் நேற்று இரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடினார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தார்.

உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விமல்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News