தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள் 4 பேருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை- முதலமைச்சர் வழங்கினார்

Published On 2024-09-25 08:00 GMT   |   Update On 2024-09-25 08:00 GMT
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை:

பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி ரூபாய், வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைகள் நித்ய ஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய், ஆடவர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனுக்கு 1 கோடி ரூபாய், என உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

மாரியப்பன் 2016-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும், 2020-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2024 பிரான்சு நாட்டின் பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் என தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News