அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு மீண்டும் நாளை கூடுகிறது
- ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.
- தி.மு.க. ஐ.டி. பிரிவு, சுற்றுச்சூழல், விளையாட்டு மேம்பாடு ஆகிய 3 அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டு தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர்.
நேற்று தி.மு.க. ஐ.டி. பிரிவு, சுற்றுச்சூழல், விளையாட்டு மேம்பாடு ஆகிய 3 அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நாளை காலையிலும் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடுகிறது. இதில் மருத்துவர் அணி, மீனவர் அணி, சிறுபான்மையினர் அணியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.