தமிழ்நாடு
டி.பி.ஐ. வளாகத்தில் பதவி உயர்வு கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
- சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
- கடந்த 18 ஆண்டுகளாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறோம்.
சென்னை:
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
போராட்டம் பற்றி செயலாளர் சுந்தரபாண்டியன் கூறியதாவது:-
கடந்த 18 ஆண்டுகளாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாக வைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கிலும் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பதவி உயர்வு வழங்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.