202 கிராம் எடையில் ராட்சத கோழி முட்டை
- முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது.
- முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.
சாதாரணமாக ஒரு கோழி முட்டையின் எடை 50 கிராம் முதல் 70 கிராம் வரை இருக்கும். ஆனால் கனடா நாட்டில் ஒரு கோழி 202 கிராம் எடையில் முட்டையிட்டுள்ளது. அங்குள்ள மணிடோபா பகுதியை சேர்ந்த ஆஷாபார்டெல் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 2 வயது நிரம்பிய கோழி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிடும் பருவத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஷா அங்கு சென்ற போது தரையில் ராட்சத முட்டை ஒன்று கிடந்தது. அதை பார்த்ததும் ஆஷா ஆச்சரியம் அடைந்தார்.
ஏனென்றால் அந்த முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த முட்டை சிறிய மாம்பழம் அளவில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என ஆஷா கூறினார். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதே நேரம் உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டை என கின்னஸ் சாதனை படைத்த முட்டை என்றால் அது 1956-ம் ஆண்டு நியூஜெர்சியில் ஒரு கோழியால் இடப்பட்ட 454 கிராம் எடை கொண்ட கோழி முட்டை ஆகும்.