தமிழ்நாடு

மத்திய-மாநில அரசுகள் கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்... ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2024-09-13 05:55 GMT   |   Update On 2024-09-13 05:55 GMT
  • கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும்.
  • கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்களால் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதையும், தரம் மிக்க அசல் வஸ்திரங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதாவது 1985 ரக ஒதுக்கீடு தடைச்சட்டத்தில் உள்ள கோட்பாடுகள் முறையாக சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு விசைத்தறியில் எந்தவித ஜரிகையும் பயன்படுத்தி சேலை நெசவு செய்யக்கூடாது என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும். இதனால் கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். இச்சூழலில் கைத்தறி தொழிலில் ஈடுபட நெசவு செய்யும் தொழிலாளர்கள் வரத் தயங்குகிறார்கள்.

எனவே மத்திய, மாநில அரசுகள் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, கைத்தறி தொழிலைப் பாதுகாத்து, கைத்தறி நெசவாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News