தமிழ்நாடு (Tamil Nadu)

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-12-31 05:35 GMT   |   Update On 2022-12-31 05:35 GMT
  • பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
  • தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்த போதிலும் அதிகளவு விலை ஏற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் இன்று பவுன் ரூ 41 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்து உள்ளது. நேற்று கிராம் ரூ.5115-க்கு விற்பனை ஆனது, இன்று இது ரூ.5130 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று பவுன் ரூ.40,920-க்கு விற்கப்பட்டது. இன்று இது அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.15-ம் பவுன் ரூ.120-ம் உயர்ந்து உள்ளது.

பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்தளவு உயர்ந்து இருப்பதாக நகை கடை அதிபர்கள் தெரிவித்தனர். தங்கம் உச்சத்தை தொட்டு உள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ 74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும். கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74.300 ஆகவும் குறைந்து உள்ளது.

Tags:    

Similar News