அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
- ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபவிழா முடிந்து மலை தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருவார்கள்.
- விவிஐபி, சிபாரிசு தரிசன கடிதங்களை தவிர்க்கும் விதமாக அம்மணி அம்மன் கோபுர வாசலையே மூடிவிட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த 26-ந்தேதி 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபம் 11 நாட்கள் வரை காட்சியளிக்கும். இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பவுர்ணமி, விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபவிழா முடிந்து மலை தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருவார்கள்.
இந்த ஆண்டு விடுமுறை நாளான நேற்று கோவிலை சுற்றி பொது தரிசனம் மற்றும் அம்மணி அம்மன் கோவில் வழியாக செல்லும் கட்டண தரிசன வரிசையில் கோவிலுக்கு வெளியே மதில் சுவர் வரை வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் . இதனால் நெரிசல் ஏற்பட்டது.
கோவில் உட்பிரகாரங்களில் பக்தர்கள் இரவு 12 மணி வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். விவிஐபி, சிபாரிசு தரிசன கடிதங்களை தவிர்க்கும் விதமாக அம்மணி அம்மன் கோபுர வாசலையே மூடிவிட்டனர்.
கோவிலில் சுற்றியுள்ள ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், மாட வீதிகள், கிரிவலப்பாதை, சின்னக்கடை தெருக்களில் டீ, குடிநீர் பாட்டில்கள் விற்பனை சூடுபிடித்தது.
அதே போல் விடுமுறை நாளான இன்றும் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கொட்டும் மழையிலும் கோவில் வெளியே உள்ள சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
விடுதிகளில் ஆன்லைனில் மிக அதிக கட்டணங்களில் அறைகள் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தனர்.
#WATCH | Tiruvannamalai, Tamil Nadu: Devotees were waiting in long queues to visit Arunachaleswarar temple while it was raining.
— ANI (@ANI) December 3, 2023
(Visuals from the early morning) pic.twitter.com/NVcl4tr0Gb