தமிழ்நாடு (Tamil Nadu)

ஒண்ணா இருந்தா நல்லா இருக்குமே...! ஜி.கே.வாசன் ஆதங்கம்

Published On 2023-10-28 07:03 GMT   |   Update On 2023-10-28 07:03 GMT
  • பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பிரிவு துரதிர்ஷ்ட வசமானது.
  • பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் அடித்தளமாக இருக்கும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் கோவை விமான நிலையத்தில் நேற்று மதியம் சந்தித்து கொண்டனர். இருவரும் சுமார் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தலைவர்கள் இப்படி தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் ஆதங்கங்களை எப்படியாவது கொட்டி விடுவார்கள் அல்லவா! அப்படித்தான் இந்த நிகழ்வும் அமைந்தது.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு அந்த கட்சிகளுக்கு ஏற்படுத்திய வலியைவிட அந்த அணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சியான த.மா.கா.வுக்கு கூடுதல் வலியை ஏற்படுத்தி இருப்பதை வாசன் பட்ட ஆதங்கம் வெளிப்படுத்தியது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பிரிவு துரதிர்ஷ்ட வசமானது. தி.மு.க. எதிர்ப்பு அணி ஒன்றாக நிற்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க., புதிய தமிழகம் என்று அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியாக நின்றால் எளிதில் வெற்றி பெற முடியும்.

பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றிதான் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் அடித்தளமாக இருக்கும் என்ற தனது உள்ள கிடைக்கையை பேச்சின் இடை இடையே வாசன் பதிவு செய்ய தவறவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை. அண்ணாமலையின் விமர்சனமும், மேலிடத்தின் பாராமுகமும் தான் அ.தி.மு.க.வினரை ஆத்திரபட வைத்ததை எடப்பாடியின் பேச்சுக்களும் வெளிப்படுத்தியது.

உடைந்தது உடைந்ததுதான். இனி ஒட்டுவதற்கான வாய்ப்பில்லை என்பதை இரு தலைவர்களும் பேசிக் கொண்டிருந்ததை வைத்து யூகிக்க முடிந்ததாக கூறினார்கள்.

அரசியல்னா இப்படித்தான் இருக்கும் என்ற மனநிலையோடு எடப்பாடி பழனிசாமி சென்னை விமானத்திலும் வாசன் மும்பை விமானத்திலும் பறந்தார்கள்.

Tags:    

Similar News