தமிழ்நாடு

ராஜீவ் கொலையில் 6 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கவர்னர்களுக்கு படிப்பினை- கமல்ஹாசன் கருத்து

Published On 2022-11-13 07:00 GMT   |   Update On 2022-11-13 07:00 GMT
  • மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை.
  • நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் 6 பேர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News