தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு விழா: சென்னையில் நாளை பொதுக்கூட்டம்

Published On 2023-06-06 08:06 GMT   |   Update On 2023-06-06 08:06 GMT
  • கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
  • தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை:

ஒடிசா ரெயில் விபத்துக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஒடிசா ரெயில் விபத்தைத் தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் நாளை (ஜூன் 7-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

Tags:    

Similar News