மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகள்..!
- கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.
- தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.
சென்னை :
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகள்..!
தமிழக தென் மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கும் கனமழை பெருவெள்ளம் குறித்து ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்களின் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில் தென் மாவட்டங்கள் பாதிப்பு குறித்து, தமிழக பாஜக
இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் இணைந்து தென் மாவட்ட பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அம்மா அவர்களுக்கு நன்றிகள்..!
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 22, 2023
தமிழக தென் மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கும் கனமழை பெருவெள்ளம் குறித்து ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் மத்திய குழு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு… pic.twitter.com/T9qO6RrkBX