கோவையில் சிறப்பு பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மஞ்சப்பை
- பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் எளிதாக செல்வதற்காக போக்குவரத்து துறையினர் பஸ் செல்லக்கூடிய வழித்தடங்களையும் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
- பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நீலாம்பூர்:
தீபாவளி பண்டிகையை ஒட்டி சூலூர் புறநகர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, கரூர் பகுதிகளுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தீபாவளிக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொதுமக்கள் பஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.
அவர்கள் எளிதாக சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் எளிதாக செல்வதற்காக போக்குவரத்து துறையினர் பஸ் செல்லக்கூடிய வழித்தடங்களையும் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சிரமம் இன்றி பஸ்கள் கிடைக்கிறது. மேலும் சிங்காநல்லூர் பஸ் நிலையம் செல்லாமல் புறநகரில் இருந்து செல்வது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு எதுவாக இருக்கிறது என்றனர்.
இதற்கிடையே முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூலூரில் இருந்து திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணித்த பயணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.