தமிழ்நாடு

நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கண்டிப்பாக கிடைக்கும்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

Published On 2023-08-20 04:13 GMT   |   Update On 2023-08-20 04:13 GMT
  • விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  • கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசியல்வாதி ஒருவர் பேசியது அவரது சொந்த கருத்து. அவர்களுடைய மாநிலத்தில் விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இடையிடையே அவ்வப்போது அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து டெல்டா பகுதிகளில் பயிர்கள் பாதிக்காத வண்ணம் தண்ணீர் கிடைப்பதற்கு வழி வகை செய்வார். நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News