தமிழ்நாடு

குடிநீர் எந்திரத்தில் பட்டனை அமுக்கி தண்ணீர் குடிக்கும் சுற்றுலா பயணிகள்


மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நவீன குடிநீர் வசதி

Published On 2022-06-06 08:38 GMT   |   Update On 2022-06-06 10:53 GMT
  • கொரோனா தொற்று பரவும் பயம் இல்லை, குடிநீர் வீணாகுவதும் இல்லை.
  • பெரியவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் நான்கு விதமான பைப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் கடற்கரை கோயில் வளாகத்தில் சென்னை விமான நிலையத்தில் இருப்பது போன்ற நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் "வெப்கோஸ்" நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து திறந்து வைத்தார்.

இந்த நவீன குடிநீர் எந்திரத்தில் பட்டனை அமுக்கியதும் நேரடியாக டம்ளர் இல்லாமல் தண்ணீர் குடிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் பயம் இல்லை, குடிநீர் வீணாகுவதும் இல்லை.,

பெரியவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் நான்கு விதமான பைப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன குடிநீர் எந்திரம் பயன்பாடு மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News