5½ ஆண்டுகள் பட்டப்படிப்புக்கான இயற்கை- யோகா மருத்துவ கவுன்சிலிங் 10-ந்தேதி தொடக்கம்
- அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் 19 கல்லூரிகள் உள்ளன.
- அரும்பாக்கம் கல்லூரியில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன.
சென்னை:
தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நாளை மறுநாள் (10-ந்தேதி) தொடங்குகிறது.
இந்த கவுன்சிலிங் அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் நடைபெறும். அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் 19 கல்லூரிகள் உள்ளன.
இதில் அரும்பாக்கம் கல்லூரியில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன.
இதில் சேருவதற்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 5 ஆண்டு பட்டப்படிப்பான இதற்கு நீட் தேர்வு கிடையாது. தமிழக அரசு பாடத்திட்டத்தில் பிளஸ்-2ல் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குனரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.