தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2024-05-19 05:02 GMT   |   Update On 2024-05-19 06:14 GMT
  • தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
  • தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே இன்றும், நாளையும் தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மேலும் மழை பெய்யுமா? என்பது தெரிய வரும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த வாரமும் மழை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News