யோகா ஆசிரியர்களுக்கு 14 மாத சம்பளத்தை அரசு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
- நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, 14 மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல்.
- நிலுவையில் உள்ள வழக்கினை விரைந்து முடித்து நீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் மன உளைச்சலைப் போக்கும் பணியில் ஈடுபடும் யோகா ஆசிரியர்களுக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியைப் பெற்று, அதனை கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, 14 மாதங்களாக ஊதியத்தை வழங்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, யோகா ஆசிரியர்களுக்கான 14 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்கினை விரைந்து முடித்து நீதிமன்ற உத்தரவிற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.