தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு
- புதுடெல்லியில் உளவு பிரிவில் இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி.அலி பிரகாஷ், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- ஏ.டி.சி.பி. வன்னிய பெருமாள், தமிழ்நாடு பொது வழங்கல் காப்பீடு ரேஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 45 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக கூடுதல் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அருண் பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று போலீஸ் அகாடமியிலும், ஐ.ஜி. கல்பனா நாயக், கூடுதல் டி.ஜி.பி.யாகி பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவிலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லியில் உளவு பிரிவில் இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி.அலி பிரகாஷ், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஏ.டி.சி.பி. வன்னிய பெருமாள், தமிழ்நாடு பொது வழங்கல் காப்பீடு ரேஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் டி.ஐ.ஜி, பிரவீன் குமார் அபினப் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை இணை கமிஷனராக இருந்த டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷனராகவும், திண்டுக்கல் டி.ஐ.ஜி, ரூபேஷ் மீனா, ஐ.ஜி.யாகி அமலாக்கத்துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் டி.ஜி.பி. சத்தியபிரியா, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி கமிஷனராகி உள்ளார். சி.பி.ஐ., டி.ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் . நெல்லை ஐ.ஜி. அவினாஸ் குமார் சென்னைக்கும், சென்னை ஐ.ஜி. தமிழ் சந்திரன் பயிற்சி கல்லூரிக்கும், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி கமிஷனர் கார்த்திகேயன் மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் பதவி உயர்வு பெற்று கோவை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் துணை கமிஷனர் நிஷா மிட்டல் பதவி உயர்வு பெற்று சென்னை இணை கமிஷனராகி உள்ளார்.
டி.ஐ.ஜி. துரை பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் ஐ.ஜி.யானார். ஆவடி துணை கமிஷனர் மகேஷ் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் துணை கமிஷனர் அபினவ் குமார் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் டி.ஐ.ஜி.யானார்.
தாம்பரம் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென்சென்னை இணை கமிஷனராகி உள்ளார். சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ஷியா உல்கக், சீருடை பணியாளர் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் டி.ஐ.ஜி ஆகி உள்ளார்.
கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நிர்வாகப்பிரிவு ஏ.ஐ.ஜி. சாந்தி, கோவை துணை கமிஷனர் மூர்த்தி, சென்னை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், விருதுநகர் எஸ்.பி. மனோகர், என்.ஐ.ஏ. எஸ்.பி.தர்மராஜன், டெல்லி சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா ஆகியோர் டி.ஐ.ஜி.க்களாகி உள்ளனர்.
சென்னை இணை கமிஷனர் ராஜேஸ்வரி, சேலம் கமிஷனராகவும், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில் வாகனன் சென்னை போக்குவரத்து பிரிவுக்கும், சென்னை போக்குவரத்துப் பிரிவு இணை கமிஷனர் ராஜேந்திரன், நெல்லைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை துணை கமிஷனர் ஷியாமளா தேவி, பெரம்பலூர் எஸ்.பி.யாகவும், பெரம்பலூர் எஸ்.பி. மணி தாம்பரத்துக்கும், மதுரை துணை கமிஷனர் மோகன் ராஜ் கள்ளக் குறிச்சிக்கும், மதுரை துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் விருதுநகருக்கும், சென்னை எஸ்.பி. சாய் பிரனீத் மதுரைக்கும், சிவகங்கை எஸ்.பி. செந்தில் குமார், திருச்சி ரெயில்வேக்கும், திருச்சி ரெயில்வே எஸ்.பி. அதிவீரபாண்டியன், தாம்பரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி. ரோஹித் மயிலாப்பூர் துணை கமிஷனரானார். சென்னை துணை கமிஷனர் மீனா, தலைமையகத்துக்கும், தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஸ், ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.